Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கடைய திறக்க யார் அனுமதி கொடுத்தா…? 10கிலோ கறிகள் அழிப்பு….. ரூ40,000 அபராதம்….!!

நாமக்கல்லில் தடையை மீறி இறைச்சிக்கடை நடத்திய உரிமையாளர்களுக்கு ரூபாய் 40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாமக்கல் மாவட்டத்தில் இறைச்சி கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மாவட்டம் முழுமைக்கும் தடை விதிக்கபடாமல் நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு மட்டும் இந்த வாரத்தில் தடை விதிக்கப்பட்டிருந்தது இந்நிலையில் தடையை மீறி இறைச்சிக்கடைகள் செயல்படுகிறதா ? என நகராட்சி ஆணையர் அதிரடி சோதனையில் திடீரென ஈடுபட்டார்.

இந்த சோதனையில் நாமக்கல்லின் பல்வேறு பகுதிகளில் சுமார் எட்டு இறைச்சி கடைகள் தடையை மீறி கடை நடத்தியது தெரியவந்தது. இந்நிலையில் எட்டு கடைகளுக்கும் தலா ரூபாய் ஐந்தாயிரம் என மொத்தம்  ரூபாய் 40 ஆயிரம் அபராதம் விதித்ததோடு 10 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்து அழித்துவிட்டன. மேலும் இனி வரக்கூடிய காலங்களில் தடையை மீறி கடை நடத்தினால் பூட்டி சீல் வைக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |