40 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசுகளை சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்தை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்லமேடு கிராமத்தில் சட்டவிரோதமாக பட்டாசுகளை பதுக்கி வைத்து இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்குள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைத்திருந்த 40 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய பட்டாசுகளை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.