Categories
ஆன்மிகம் இந்து தேசிய செய்திகள் வழிபாட்டு முறை

அமர்நாத் குகை கோயில் பாதயாத்திரை… பாதுகாப்பு பணியில் 40,000 வீரர்கள்..!!

அமர்நாத் குகை கோயிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பாக 40,000 பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகை கோயிலில் தோன்றும்  பனி லிங்கத்தை தரிசிப்பதற்காக ஆண்டு தோறும்லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை செல்வார்கள். இந்த வருடம் பாதயாத்திரை பயணத்திற்க்காக  1,60,000 பேர் பதிவு செய்திருந்தனர். இவர்கள் அனைவரும் பல்வேறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவாக அனுப்பி வைக்கப்படுவார்கள். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜம்மு காஷ்மீர் பயணத்தின் போது பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டிருந்தார். சுமார் 40,000 பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Image result for Around 40,000 security personnel were deployed to guard the pilgrimage to the Amarnath cave temple.

இந்நிலையில் நேற்று  அமர்நாத் குகை கோயிலுக்கு பாதயாத்திரையாக முதல் பிரிவு மக்கள் தங்கள் பயணத்தை தொடங்கினர்.  காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள பஹல்காம் மற்றும் பல்தால் முகாம்கள் வழியாக பக்தர்கள் புனித யாத்திரையை மேற்கொண்டுள்ளனர். இது அமைதியான பயணமாக இருக்கும். அடுத்த ஆண்டு முதல் பயணத்தில் எந்த வித கவலையும் இருக்காது என்று மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளா.ர்

Categories

Tech |