Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

லாரி மோதி விபத்து…. கல்லூரி மாணவி பரிதாபம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டத்திலுள்ள குளிக்கரை கிராமத்தில் குமார் விவசாயி வசித்து வருகின்றார். இவருக்கு அபிராமி என்ற மகள் இருந்துள்ளார். அதே கிராமத்தில் பாலசுப்பிரமணியன் மகள் சினேகா என்பவர் வசித்து வருகின்றார். இதில் அபிராமி மற்றும் சினேகா ஆகிய இருவரும் திருவாரூர் அருகில் கிடாரங்கொண்டானில் செயல்பட்டு வரும் திரு.வி.க. அரசு கலைக் கல்லூரியில் 3-ம்  படித்து வந்துள்ளனர். இந்நிலையில் கல்லூரி இறுதியாண்டு தேர்வு விடைத்தாள்களை அஞ்சல் மற்றும் கூரியர் மூலமாக அனுப்பி வைப்பதற்கு கல்லூரி நிர்வாகம் மாணவ- மாணவிகளுக்கு அறிவித்துள்ளது. ஆனால் கல்லூரி அருகில் வசிப்பவர்கள் தேர்வு விடை தாள்களை நேரடியாக கல்லூரி நிர்வாகத்திடம் வழங்கி வருகின்றனர்.

இதனால் தேர்வு விடைதாள்களை கல்லூரியில் கொடுப்பதற்காக மாணவிகள்  இருவரையும் அபிராமியின் தம்பி முத்துக்குமார் என்பவர் மோட்டார்சைக்கிளில் கல்லூரிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது சீனிவாசபுரம் என்ற இடம் அருகில் எதிரே வந்த லாரியின் சக்கரத்தில் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் முத்துக்குமார் மற்றும் அவரது பின்புறத்தில் அமர்ந்திருந்த அக்கா அபிராமி. சினேகா ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அபிராமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தாலுகா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து லாரி டிரைவரான மேட்டு தெருவைச் சேர்ந்த சக்திவேல் என்பவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |