40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையயம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 8 மாவட்டங்களின் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் மீனவர்களுக்காக ஒரு எச்சரிக்கையும் விடப்பட்டு இருக்கின்றது. குமரிக்கடல், மாலத்தீவு, கேரள கடற்பகுதி, லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையயம் தெரிவித்துள்ளது.
இன்றையதினம் இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ள வானிலை ஆய்வு மையம், நாளைக்கு மாலத்தீவு, கேரள கடற்பகுதி, லட்சத்தீவு, தென்கிழக்கு அரபிக்கடல் உள்ளிட்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தபட்டுள்ளது.
தற்போதைய நிலையில் படிப்படியாக மழை குறையும் என்ற ஒரு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்து வரக்கூடிய 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் கன மழை வாய்ப்பு இருக்கிறது. அடுத்து வரக்கூடிய நாட்களான 18, 19, 20 ஆகிய நாட்களில் மழை கொஞ்சம் கொஞ்சமாக குறையும். அதற்கு பிறகு சில நாட்களுக்கு வறண்ட வானிலை இருக்கும், அதன் பின் மீண்டும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததற்கு வாய்ப்பிருக்கிறது என சொல்லப்பட்டுள்ளது.