Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

தனியாக இருந்த ஆசிரியர்…. மர்ம நபரின் கைவரிசை…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் மர்மநபர் தங்க சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டத்திலுள்ள செங்கோடி பகுதியில் செல்வன் பாக்கியராஜ் என்பவர் வசித்து வருகின்றார். இவரது மனைவி விமலா ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியராக இருக்கின்றார். இவருடைய மகள் திருமணம் முடிந்து வெளியூரில் வசித்து வருகின்றார். இதனையடுத்து செல்வன் பாக்கியராஜ் மாலை வேளையில் கடை பகுதிக்கு சென்று இருந்தார். இந்நிலையில் தனியாக இருந்த விமலா வீட்டின் பின்புறத்தில் நின்று மகளிடம் பேசிக்கொண்டு இருந்தார்.

அப்போது வீட்டின் பின்பக்கம் உள்ள ரப்பர் தோட்டத்திற்குள் மறைந்திருந்த மர்ம நபர் விமலாவின் கழுத்தில் கிடந்த 7 1/2 பவுன் தங்க நகையை பறித்துள்ளார். இதனால் விமலாவின் கூச்சல் சத்தம் கேட்டு அருகில் இருப்பவர்கள் ஓடி வருவதற்குள் மர்ம நபர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதுகுறித்து விமலா திருவட்டார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Categories

Tech |