சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளர்களுடன் பிரேமலதா விஜயகாந்த் ஆலோசனை நடத்தி வருகின்றார்.
தற்பொழுது சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் உட்பட 70 பேருடன் தேமுதிக கட்சி பொருளாளர் பிரேமலதா ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
12.30 மணிக்கு தொடங்கிய கூட்டம் தற்போது வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் முக்கியமாக கடந்த தேர்தலின்போது தேமுதிக எவ்வளவு வாக்குகள் பெற்றது. தேமுதிக சார்பில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் பெற்ற வாக்கு சதவீததம் என்ன ? என்பது குறித்தெல்லாம் விவாதிக்கிறார்கள்.
முக்கியமான விஷயம் என்னவென்றால் வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் தேமுதிக அதிமுகவுடன் கூட்டணி தொடருமா ? என்ற விவாதம் எழுந்துள்ளது. குறிப்பாக தேமுதிக சார்பில் நடந்த கடந்த ஆலோசனை கூட்டத்தில் யார் அதிக சீட் கொடுக்கிறார்களோ… அவர்களுடனே கூட்டணி என்ற கருத்தை முன்வைத்தார்கள். 42 சீட் கொடுக்க வேண்டும் என்ற ஒரு நிபந்தனை தேமுதிகவினர் வைத்துள்ளார்கள். ஆனால் அதிமுக சார்பில் இவர்களுக்கு 14 தொகுதிகள் ஒதுக்குவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகின்றது.