பாலிவுட் நடிகர் பர்கான் அக்தர், பிரபல பாடகி ஷிபானி தந்தேக்கர் இருவரும் திருமணம் செய்துகொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் பர்கான் அக்தர். இவர் ராக் என்ற திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இவர் நடிப்பில் வெளிவந்த பாக மில்கா சிங் திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது. மேலும் பர்கான் அக்தர் சில படங்களை இயக்கியும் உள்ளார். இதை தொடர்ந்து அமீர்கான் நடிப்பில் வெளிவந்த ‘தில் சத்தா ஹை’ திரைப்படத்தை பர்கான் அக்தர் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் தேசிய விருது பெற்றது.
பர்கான் அக்தர் 2009 ஆம் ஆண்டு பாபானி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்குத் திருமணமாகி 17 ஆண்டுகளுக்குப் பிறகு விவாகரத்து செய்து பிரிந்தனர். அதற்கு பின்பு பாலிவுட்டில் பிரபல பாடகி மற்றும் நடிகையுமான ஷிபானி தந்தேக்கர் இருவரும் மூன்று ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இந்நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இருவருக்கும் 21ம் தேதி திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.