Categories
அரசியல்

தமிழ்நாட்டில் கொரோனாவின் கோரப்பசிக்கு இன்று 41 பேர் மரணம்… மொத்த பலி 666 ஆக உயர்வு!!

தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 41 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன் காரணமாக இதுவரை மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 666 ஆக உயர்ந்தது. அதிகபட்சமாக சென்னையில் இன்று 28 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 529 ஆக அதிகரித்துள்ளது.

சென்னைக்கு அடுத்தபடியாக, திருவண்ணாமலையில் இதுவரை 33 பேர் உயிரிழந்துள்ளனர். செங்கல்பட்டில் 41, காஞ்சிபுரத்தில் 10 உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுதவிர, தேனியில் 2 பேர், கடலூரில் 3 பேர், விருதுநகர் மற்றும் கன்னியாகுமரியில் ஒருவர் என இதுவரை உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் தற்போது உயிரிழந்தவர்களின் விகிதம் 1.223% ஆக உயர்ந்துள்ளது.

Categories

Tech |