தமிழகத்தில் இன்று 413 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 13,170 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 56.05% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனோவால் இன்று 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 184 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மட்டும் இன்று 1,162 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 23,495 ஆக உயர்ந்துள்ளது. அதில் 1057 பேர் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் 1,112 பேரும், வெளிநாடுகளில் இருந்து வந்த 50 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 685 பேர் ஆண்கள், 473 பேர் பெண்கள், 4 திருநங்கை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 43 அரசு மற்றும் 29 தனியார் மையங்கள் என மொத்தம் 72 கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது 10,138 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் இன்று புதிதாக 967 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 15,770 ஆக உயர்ந்துள்ளது.