செசன்யாவை சேர்ந்த 6 வயது சிறுவன் 2 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 183 தண்டால் எடுத்து உலக சாதனை நிகழ்த்தியுள்ளான்.
ரஷ்ய குடியரசில் உள்ள செசன்யாவை சேர்ந்த 6 வயது சிறுவன் ரஹிம் குரயேவ். இவர் அப்பகுதி மக்களால் செல்லமாக அர்னால்டு என்று அழைக்கப்பட்டு வருகிறான். ஏன் அர்னால்டு என்று அழைக்கப் படுகிறான் என்றால் தண்டால் எடுப்பதில் அதிக ஆர்வம் கொண்ட சிறுவன் இரண்டு மணி நேரத்தில் 4 ஆயிரத்து 183 தண்டால் எடுத்து உலக சாதனை நிகழ்த்தியுள்ளான்.
சிறுவனின் இந்த சாதனையை கேள்விப்பட்ட ரஷ்ய அதிபர் புதினின் நெருங்கிய நண்பரான கெடிரோவ் என்பவர் சிறுவனின் சாதனைக்காக பரிசு ஒன்றை கொடுத்துள்ளார். அதாவது சிறுவன் ரஹீமுக்கு மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் வகை கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். சிறுவனின் இந்த சாதனை அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.