குஜராத்தை சேர்ந்த தம்பதிகள் தனது மகனின் மரபனு பிரச்சினைக்காக 16 கோடி நிதியை பெற்றோர்கள் திரட்டியுள்ளனர்.
குஜராத் நகரின் மஹிசாகர் மாவட்டம் கனேசர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்தீப்சிங் ரத்தோட் இவரின் மனைவி ஜினால்பா. இவர்களுக்கு தைர்யராஜூ என்ற மகன் உள்ளார். இவருக்கு முதுகுத்தண்டில் மரபணு சார்ந்த பிரச்சினை இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் இவர் கை கால்களை அசைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மூச்சுவிடும் திறனும் பாதிக்கப் பட்டது. இதையடுத்து இந்த பிரச்சனையை சரி செய்வதற்கு ஒரு ஊசி இருக்கிறது என்றும் அது சுவிட்சர்லாந்து மையமாக கொண்ட நோவார்டிஸ் என்ற மருத்துவ நிறுவனம் தயாரிக்கிறது என்றும் தெரிய வந்தது .
ஆனால் இதன் மதிப்பு 16 கோடி. 5 மாதம் குழந்தையாக இருக்கும் அவரது மகனுக்கு அந்த ஊசியை வாங்க முடிவு செய்த அந்த தம்பதிகள் குஜராத் மட்டுமல்லாமல் பல ஊர்களில் பிரச்சாரம் செய்து நன்கொடை கேட்டனர். இதையடுத்து 42 நாட்களில் 16 கோடி கிடைத்தது. உடனடியாக அமெரிக்காவிலிருந்து அந்த ஊசியை வரவழைத்தனர். இதன் இறக்குமதி விலை 6.5 கோடி ரூபாயை மத்திய அரசு தள்ளுபடி செய்தது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்ட அந்த சிறுவனுக்கு ஊசி செலுத்தப்பட்டது.