தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும் மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு ரூபாய் 4 ஆயிரம் நிதி உதவி அறிவிக்கப்பட்டது. பேருந்துகளில் மகளிருக்கு இலவசமாக பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை முதல்வர் மு.க ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் காஞ்சிபுரத்தில் “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் 22 பேருக்கு முதியோர் உதவித்தொகை, 20 இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் பல்வேறு கிராமங்களை சேர்ந்த பெரும்பாலான மக்கள் இலவச வீட்டுமனை, முதியோர் உதவித்தொகை கேட்கப்பட்டது தொடர்ந்து வழங்கப்பட்டுள்ளது.