Categories
சேலம் மாவட்ட செய்திகள்

42 மாணவிகள்… திக் திக் பயணம்… பேக்கரிக்குள் நுழைந்த பேருந்து…. கோர விபத்து…..!!!!

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே வீராச்சி பாளையத்தில் விவேகானந்தா மகளிர் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த கல்லூரியில் படிக்கும் 42 மாணவிகள் கல்லூரி முடித்துவிட்டு கல்லூரி பேருந்தில் சென்றனர்.இந்நிலையில் கோவையிலிருந்து சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சின்னா கவுண்டனூர் நான்கு ரோடு சந்திப்பில் வலது புறம் திரும்பி சங்ககிரி நோக்கி சென்ற போது சேலத்தில் இருந்து எதிரே வந்த கன்டெய்னர் லாரி மோதி பேருந்து விபத்துக்குள்ளானது.

அப்போது கல்லூரி பேருந்து ஓட்டுனர் சண்முகம் மற்றும் கண்டைனர் லாரி ஓட்டுனர் பார்த்திபன் ஆகிய இருவரும் ஒரே திசையில் திரும்பியதால் அங்குள்ள பேக்கரி கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. அந்த கோர விபத்தில் 42 கல்லூரி மாணவிகளும் சிறு காயம் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதனைத் தொடர்ந்து இந்த விபத்து தொடர்பாக போலீசா தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Categories

Tech |