Categories
திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நெல்லையில் இன்று ஒரே நாளில் 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

நெல்லையில் இன்று ஒரே நாளில் 42 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா உறுதி செய்யப்பட்ட 42 பேரில் 41 பேர் வெளிமாநிலங்களில் இருந்து நெல்லை திரும்பியவர்கள் என தெரியவந்துள்ளது. இதையடுத்து நெல்லை மாவட்டத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு உறுதியானவர்களின் எண்ணிக்கை 178 ஆக உயர்ந்துள்ளது. நேற்று வரை நெல்லை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 136 ஆக இருந்தது. அதில் 63 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒருவர் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 114 ஆக உயர்ந்துள்ளது. நெல்லை மாவட்டத்திற்கு கடந்த 4 நாட்களாக மும்பை, குஜராத் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து மக்கள் வந்த வண்ணம் உள்ளனர். இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நெல்லை மாவட்டம் கங்கை கொண்டானில் உள்ள சோதனை சாவடியில் வெளிமாநில நபர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் அதிகப்படியான தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |