உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் உச்சக்கட்டத்தை அடைந்து ஒரே நாளில் உக்ரைன் படையை சேர்ந்த 420 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொள்ளும் போர் 130 நாட்களை கடந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. ரஷ்யப்படையினர், உக்ரைன் நாட்டின் தெற்குப்பகுதியை ஆக்கிரமிக்க தீவிரமாக முயன்று வருகிறார்கள். அதற்காக கடும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில் உக்ரைனின் தெற்கு பகுதியில் இருக்கும் மைக்கோலைவ் என்னும் நகரத்தில் ரஷ்யப்படையினர் பயங்கர தாக்குதல் மேற்கொண்டதில் உக்ரைன்ப்படையை சேர்ந்த 420 வீரர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.
இது பற்றி ரஷ்ய ராணுவ அமைச்சகம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, மைக்கோலைவ் நகரத்தில் இருக்கும் கப்பல் கட்டும் தளத்தில் அதிநவீன ஏவுகணைகளை வைத்து ரஷ்க படையினர் துல்லியமாக தாக்குதல் மேற்கொண்டனர்.
இதில் உக்ரைன் படையை சேர்ந்த 350 வீரர்கள் உயிரிழந்தனர். இதே போன்று அந்நகரில் இருக்கும் தற்காலிக இராணுவ முகாமிலும் தாக்குதல் நடத்தினோம். அதில் 70 வீரர்கள் உயிரிழந்தார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறது.