சீனாவில் தரமில்லாத முகமூடிகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தயாரித்ததாக 4,260 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சீனா அரசு கொரோனா வைரஸ் பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியிருக்கும் அதே நேரத்தில், கிரிமினல் குற்றவாளிகள் நோய்தொற்றை பயன்படுத்தி ஏதாவது குற்ற செயலில் ஈடுபட்டால் அவர்களை கண்டறிந்து, தண்டிக்கும் பணிகளையும், முடுக்கிவிட்டிருக்கிறது.
அந்த வகையில் சீன அரசு, தரமில்லாத முகமூடிகளை தயாரித்து பெரும் லாபம் பார்த்த சிறு, குறு நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் அவற்றை விற்பனை செய்தவர்கள் உட்பட நோய் தடுப்பு மருத்துவப் பொருட்கள் அனைத்தையும் தயாரித்தவர்களை தீவிரமாக கண்காணித்து கைது செய்து வருகிறது.
தரமே இல்லாத 3 கோடி முகமூடிகள் மற்றும் நோய் தடுப்பு உபகரணங்கள் என 180 கோடி ரூபாய் மதிப்பிலான தரமற்ற மருத்துவ உபகரணங்கள் இதுவரையில் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் சீன அரசு தெரிவித்துள்ளது.. மேலும் இதுதொடர்பாக, 4,260 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று சீன உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.