Categories
அரசியல்

43 கோடிக்கு பேருக்கு பேங்க் அக்கவுண்ட் இருக்கிறது!’ – எச்.ராஜா பேட்டி…

43 கோடிக்கு பேருக்கு பேங்க் அக்கவுண்ட் இருக்கிறது என பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, மாண்புமிகு பிரதமர் மோடி அவருடைய அரசு மிக மோசமான கொரோனா காலத்தில் கூட நாட்டு மக்களை காப்பாற்றி இன்று முதல் முறையாக உலகப் பத்திரிகைகள் ஒப்புக்கொள்ள துவங்கியிருக்கின்றன. பொருளாதார வீழ்ச்சியை ரிவர்ஸ் பண்ணி வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்கின்ற நிலைக்கு இந்தியா இருக்கிறது.

அது மட்டும் இல்லை இந்த நாட்டில் விளிம்புநிலையில் கீழே இருப்பவர்கள் அவர்களுக்கான திட்டங்களை மத்திய அரசாங்கம் வீடு வரை கொண்டு போய் சேர்கிறது. இன்றைக்கு கொரோனா தடுப்பூசி  87 கோடி பிரிட்டனை போல 12 மடங்கு மக்கள் தொகைக்கு தடுப்புசி போட்டிருக்கிறோம். அது மட்டுமில்லை எத்தனையோ தடுப்பூசிகள் போலியோவில் இருந்து அம்மையிலிருந்து நாம் உபயோகப்படுத்தி இருக்கிறோம். ஆனால் ஒன்றாவது இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டதா ? இல்லை.

முதன்முறையாக கொரோனா தடுப்பூசி இரண்டு ஊசிகள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தீபாவளி வரைக்கும் 80 கோடி பேருக்கு ஒவ்வொருத்தருக்கும் 5 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு. விவசாயிகளுக்கு மூலதனத்திற்கு வருடத்திற்கு மூன்று முறை 2000 ரூபாய் கை செலவுக்கு. அதே மாதிரியாக கழிவறை இல்லாத வீடுகளுக்கு கழிவறை, கேஸ் இல்லாத வீடுகளுக்கு கேஸ், பிஜேபி 2014 இல் ஆட்சிக்கு வருவதற்கு முன்னாடி வெறும் மூன்று கோடி பேருக்கு தான் பேங்க் அக்கவுண்ட் இருந்தது. இப்போது எவ்வளவு இருக்கு தெரியுமா 43 கோடி. ஆகவே இந்த நாட்டில் ஏழை மக்களையும் உயர்த்திவிட்ட ஒரு  ஆட்சி என தெரிவித்தார்.

Categories

Tech |