18 வயது மகள் இறந்த நிலையில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த 43 வயது இளம்பெண் மீண்டும் குழந்தை பெற்றெடுத்துள்ளார்.
தார்வார் மாவட்டம், குந்துகோல், தாலுகா ஷம்சி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரப்பா காவேரி மற்றும் இவரது மனைவி ஷோபா காவேரி. இந்த தம்பதியருக்கு 19 ஆண்டுகளுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. பின்னர் ஷோபா குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துகொண்டார். ஒரே ஒரு குழந்தை என்பதால் மகளை மிகவும் ஆசையாக வளர்த்து வந்தனர். இந்த தம்பதியரின் 18 வயது நிரம்பிய மகள் கல்லூரியில் படித்து வந்துள்ளார். ரத்தசோகை நோயால் பாதிக்கப்பட்ட மாணவி கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இறந்துவிட்டார்.
சந்திரபாஸ் சோபா தம்பதி மனமுடைந்து தாங்கள் பெற்ற ஒரு மகளும் இறந்து விட்டாரே என்று மிகவும் வருத்தப்பட்டனர். மீண்டும் ஒரு குழந்தையை பெற்று எடுக்க முடிவு செய்தனர். இதில் சோபா குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து இருந்ததால் சிக்கல் ஏற்பட்டது. கணவன்-மனைவி இருவரும் உப்பள்ளி சிட்டிகுப்பி அரசு மகப்பேறு ஆஸ்பத்திரி டாக்டர் ஸ்ரீதர் தண்டடேயப்பன்னவரிடம் ஆலோசனை கேட்டனர். இதற்கு உப்பள்ளி அரசு ஆஸ்பத்திரி மாற்று அறுவை சிகிச்சை செய்து குழந்தை பிறப்பதற்கு உதவி செய்தது. அதை தொடர்ந்து பத்து மாதங்களுக்குப் பிறகு சோபா மீண்டும் கர்ப்பமானார்.
இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சோபா பிரசவத்திற்காக சில நாட்களுக்கு முன்பு சிட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதனால் ஷோபாவும் சந்திராவும் மகிழ்ச்சி அடைந்தனர். குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பெண்ணுக்கு மீண்டும் குழந்தை பிறக்க சிகிச்சை அளித்த டாக்டர்கள் செவிலியர்கள் நன்றி தெரிவித்தனர். 43 வயதில் பெண் குழந்தையை பெற்றெடுத்த சம்பவம் அந்த பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.