தம்பதியினரை கொன்று விட்டு 43 ஆண்டுகளாக சிக்காமல் இருந்த கொலை குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவில் Wyoming என்ற பகுதியில் David Schules மற்றும் Ellen Matheys என்ற தம்பதியினர் வாழ்ந்து வந்துள்ளனர். அவர்கள் இருவரும் நடைபயிற்சி செல்வதற்காக சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது தம்பதியரின் பின்னால் வந்த மர்ம நபர் ஒருவர் Davidடை சுட்டுக் கொன்றுள்ளார். இதனையடுத்து அந்த நபர் Ellen Matheysசை விரட்டியடித்து பாலியல் ரீதியாக துன்புறுத்தி அவரையும் கொன்றுள்ளார். இந்த சம்பவமானது 1976 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9 ஆம் தேதி நடைபெற்றது. இச்சம்பவம் நடந்து சுமார் 43 ஆண்டுகள் குற்றவாளி போலீசாரின் கையில் சிக்காமல் இருந்த நிலையில் கடந்த 2019ல் DNA பரிசோதனையின் மூலம் ஒருவரை போலீசார் சந்தேகித்துள்ளனர். மேலும் அவரின் DNAவானது Ellenனின் கால் சட்டையில் இருந்துள்ளது.
இதனை போலீசார் சேகரித்து வைத்துள்ளனர். மேலும் அவர்கள் அந்த DNAவானது எவருடனும் பொருந்துகிறதா என்று சோதிக்க அது Wisconsin என்ற இடத்தில் வாழும் 84 Raymand Vannieuwenhoven என்பவரின் DNA உடன் ஒத்துப்போவதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரது வீட்டுக்கு போலீசார் சர்வே எடுப்பது போல சென்றுள்ளார். இதன் பிறகு சர்வே எடுத்த காகிதத்தை ஒரு கவரில் போட்டு Raymandன் நாவினால் ஒட்டும் படி போலீசார் அவரிடம் கூறியுள்ளனர். மேலும் அது தன்னை சிக்க வைக்கத்தான் என்று தெரியாமல் Raymandம் அப்படியே செய்துள்ளார். இதனை தொடர்ந்து அந்த கவரில் இருந்த எச்சிலின் DNAவையும் 43 ஆண்டுகளுக்கு முன் கால்சட்டையிலிருந்த DNAவையும் ஒப்பிட்டு பார்த்துள்ளனர்.
அது இரண்டும் ஒத்துப்போனதை அடுத்து Raymandடை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை அளித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தற்பொழுது 84 வயதான Raymandக்கு இனி ஜாமீனும் கிடைக்காது. எனவே அவர் தனது இறுதி நாட்களை சிறையிலேயே கழிக்கவேண்டும். அதிலும் குற்றம் செய்து விட்டு 43 ஆண்டுகளுக்குப் பிறகு சிக்கியுள்ள Raymandடை கண்டு இப்படி ஒரு கொலை குற்றவாளியா இத்தனை ஆண்டுகள் இங்கு வாழ்ந்துள்ளார் என்று மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். குறிப்பாக காலம் தாழ்ந்து நீதி கிடைத்தாலும் நீதி கிடைத்ததே என்று நிம்மதி அடைந்துள்ளதாக அந்த தம்பதியரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.