Categories
உலக செய்திகள்

அகதிகள் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்து.. 43 நபர்கள் உயிரிழந்த பரிதாபம்..!!

துனிசியாவில் சுமார் 130 அகதிகள் சென்ற படகு கவிழ்ந்ததில் 43 நபர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

துனிசியாவின் எல்லைக்கு அருகில் இருக்கும் ஸ்வாரா என்ற நகரத்திலிருந்து 130 அகதிகள் ஒரு படகில் ஐரோப்பா சென்றுள்ளனர். அப்போது சார்சிஸ் நகரத்திற்கு அருகில் சென்ற படகு திடீரென்று கவிழ்ந்து விழுந்ததில், படகில் இருந்த மக்கள் மொத்தமாக தண்ணீரில் மூழ்கினார்கள்.

அந்த சமயத்தில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு கொண்டிருந்த மீனவர்கள், நீரில் மூழ்கியவர்களை மீட்க போராடியுள்ளனர். அதன் பின்பு உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த கடலோர காவல் படையினர், நீரில் மூழ்கிய 84 நபர்களை பாதுக்காப்பாக மீட்டுவிட்டனர். எனினும் சுமார் 43 நபர்கள் அதற்குள் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |