அமெரிக்காவின் மத்திய புளோரிடாவில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவுக்கு டையர் சாம்ப்சன் என்னும் சிறுவன் தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் சென்றிருந்தான் . அங்குள்ள 430 அடி உயரமுள்ள ராட்சத ராட்டினத்தில் சிறுவன் சாம்ப்சன் சந்தோசமாக சவாரி செய்து வந்தான். ஆனால் எதிர்பாராத விதமாக சிறுவன் ராட்டினத்தில் இருந்து தவறி கீழே விழுந்தான். இதை பார்த்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் விரைந்து சென்று படுகாயம் அடைத்த சாம்ப்சனை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சாம்ப்சன் உயிரிழந்து விட்டதாக கூறினார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பொழுதுபோக்கு பூங்காவின் இயக்குனர் இந்த விபத்து தொடர்பாக கூறியுள்ளதாவது, “ராட்டினத்தில் இருந்து சிறுவன் விழுந்து பலியான சம்பவத்தால் நாங்கள் மிகுந்த வருத்தம் அடைந்துள்ளோம். என்ன நடந்தது என்பதை அறிய எல்லா விசாரணைக்கும் நாங்கள் ஒத்துழைப்போம்” என்று கூறினார்.