பிரிட்டன் நாட்டின் கடல் எல்லைக்குள் பிரான்ஸ் போர்க்கப்பல்கள் புலம்பெயர்ந்த மக்களை விட்டுச் செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டன் உள்துறை செயலாளரான ப்ரீத்தி பட்டேல் கடுமையான பல நடவடிக்கைகளை மேற்கொண்டும் புலம்பெயரும் மக்கள் ஆங்கில கால்வாயை கடந்து வந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
நேற்று ஒரே நாளில் சுமார் 430 நபர்கள் பிரிட்டன் வந்திருக்கிறார்கள். இந்நிலையில் இன்று காலை நேரம் பிரிட்டன் நாட்டின் பத்திரிக்கையாளர்கள் முன்பே பிரான்ஸ் போர்க்கப்பல், ஒரு ரப்பர் படகில் 13 நபர்களை ஏற்றி வந்து பிரிட்டன் கடல் எல்லைப் பகுதியில் விட்டுச் சென்றிருக்கிறது.
அதில் ஆறு நபர்கள் மட்டுமே பயணிக்க முடியும். அவ்வளவு சிறிதான ரப்பர் படகில் 13 நபர்கள் அமர்ந்து அபாயமான நிலையில் பயணித்து வந்திருக்கிறார்கள். பத்திரிக்கையாளர்களை கண்டவுடன் பிரான்ஸ் போர்க்கப்பல் அந்த 13 பேரையும் விட்டுவிட்டு பிரான்சிற்கே திரும்பி விட்டது.