Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கோவிலில் வளர்ந்து வரும் பசுமாடுகள்…. அதிக அளவில் சேர்ந்த சாணம்…. ஏலம் எடுத்த விவசாயி….!!

விவசாயி ஒருவர் பசு மாடுகளின் சாணத்தை 43 ஆயிரத்துக்கு ஏலம் எடுத்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள முருகன் கோவிலில் பக்தர்கள் மூலமாக காணிக்கையாக விடப்பட்டிருக்கும் 25-க்கும் அதிகமான பசு மாடுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மலையடிவாரத்தில் இருக்கும் கோசாலையில் பராமரிக்கப்பட்டும் இந்த பசு மாடுகள் மூலமாக சென்னிமலை மேலே இருக்கும் முருகப்பெருமானுக்கு தினமும் காலையில் திருமஞ்சனம் கொண்டு செல்லப்பட்டு வருகின்றது.

இதனை அடுத்து கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் சாணம் தற்போது ஏலம் விடப்பட்டுள்ளது. இவற்றில் இந்து சமய அறநிலைய துறையின் பெருந்துறை சரக ஆய்வாளர் ரவிக்குமார் மற்றும் முருகன் கோவில் செயல் அலுவலர் மு. ரமணிகாந்தன், கண்காணிப்பாளர் லதா முன்னிலையில் ஏலம் நடைபெற்றுள்ளது. இதனை தொடர்ந்து 4 பேர் கலந்து கொண்டு ஏலம் கேட்டுள்ளனர். மேலும் இந்த சாணத்தை சுப்பிரமணி என்பவர் 43,000 ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளார்.

Categories

Tech |