Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இருமல், சளி அறிகுறிகளுடன் 435 பேர் கண்டறியப்பட்டுள்ளனர் – மாநகராட்சி ஆணையர் தகவல்!

சென்னை மாநகரம் முழுவதும் உள்ள வீடுகளில் 4வது நாளாக களப்பணியாளர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இருமல், சளி அறிகுறிகளுடன் 435 பேர் கண்டறியப்பட்டுள்ளனர் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல் அளித்துள்ளார். அதிக அறிகுறிகளுடன் இருப்பவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு மாற்றப்படுவார்கள். 435 பேரில் 106 பேருக்கு சாதாரண அறிகுறிகள் தான் காணப்படுகின்றது. மற்றவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என தெரிவித்துளளார்.

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 690ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா உறுதி செய்யப்பட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 64 வயது பெண் நேற்று உயிரிழந்துள்ளார். இதனால் உயிரிழப்பு 7ஆக உயர்ந்துள்ளது. தமிழத்தில் அதிகபட்சமாக சென்னையில் 149, கோவை -60, திண்டுக்கல்-45, நெல்லை-38, ஈரோடு-30, நாமக்கல் -28 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

சென்னையில் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது. தண்டையார்பேட்டை 12, தேனாம்பேட்டை 11, வளசரவாக்கம், அடையாறு, திருவொற்றியூர்- தலா 4 என சென்னையில் மொத்தம் 149 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 40 பேர் பாதித்துள்ளனர். திருவிக. நகர் மண்டலத்தில் 22 பேர், கோடம்பாக்கம் 19 பேர், அண்ணாநகர் 15 பேர், பெருங்குடி மண்டலத்தில் 5 பேர் உட்பட சென்னையில் மொத்தம் 149 பேர் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |