தமிழக தலைமைச் செயலாளர் வே. இறையன்பு 44 வது செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டி தொடர்பான பல்வேறு முன்னேற்பாடு பணிகள் பற்றி தமிழ்நாடு அரசு அமைத்துள்ள செயற்குழுக்களின் உயர் அலுவலர்களுடன் நேரில் சென்று இன்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். 44வது செஸ் ஒலிம்பியாட் 2002 போட்டிகள் மாமல்லபுரத்தில் நடைபெற இருக்கிறது. இதன் ஒரு பகுதியாக சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சிகளின் முன்னேற்பாடு பணிகளை தமிழக தலைமை செயலாளர் இறையன்பு நேரில் இன்று ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
அதன் பின் இந்த போட்டிக்கான விளம்பரம் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அமைக்கப்பட்டுள்ள பேருந்திலேயே அவர் பயணம் மேற்கொண்டு இந்த போட்டியில் பங்கு பெற உள்ள போட்டியாளர்கள் பங்கேற்பாளர்கள் பயணிக்கும் வழித்தடங்களிலும் அவர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். மேலும் மின்வாரிய பணிகள், சுகாதாரப்பணிகள், உணவகம், வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்கும் பணிகள் தொடர்பாகவும் தலைமை செயலாளர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக மாமல்லபுரம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையினையும் பூஞ்சேரி பகுதியில் 44வது கொலம்பியா 2022 போட்டிக்காக சர்வதேச கருத்தில் 52,000 சதுர அடி பரப்பில் அமைக்கப்பட உள்ள நவீன விளையாட்டு அரங்கத்தையும் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள அரங்கத்தின் மேம்பாட்டு பணிகளையும் அவர் பார்வையிட்டுள்ளார்.
மாமல்லபுரம் பகுதியில் உள்ள தாமரை குளத்தை பார்வையிட்டு அதன் சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்துள்ளார். மேலும் மாமல்லபுரம் கடற்கரை கோவில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டு பணிகள் பற்றியும் குளம் சீரமைப்பு பணிகள் பற்றியும் அவர் ஆய்வு மேற்கொண்டார். இறுதியாக சென்னை விமான நிலையத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி 2022 போட்டிக்கு வருகை தர இருக்கும் போட்டியாளர்களை வரவேற்று அழைத்து செல்லக்கூடிய வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடுகள் பணிகள் பற்றி சென்னை விமான நிலைய அதிகாரிகளிடம் அவர் கேட்டு அறிந்து கொண்டார்.
இந்த ஆய்வு பணிகளின் போது தமிழ்நாடு அரசு அமைத்திருக்கும் செயற்குழுக்களின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் முதன்மை செயலாளர் துறை தலைவர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் உயர் அலுவலர்கள் உடன் இருந்துள்ளனர். முன்னதாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 1.7.2022 அன்று சென்னை காமராஜர் சாலையில் 44வது ஒலிம்பிக் போட்டி பற்றிய விளம்பரம் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக செஸ் ஒலிம்பியாட் இலட்சினை மற்றும் சின்னத்துடன் பல்வேறு வாசகங்கள் பொறிக்கப்பட்ட 15 பேர்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.