Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“44 லட்சம் மோசடி செய்த வழக்கு”…. மனைவியுடன் வக்கீல் கைது….!!!!!!

44 லட்சம் மோசடி செய்த வழக்கில் மனைவியுடன் வக்கீல் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள செங்குன்றத்தை அடுத்திருக்கும் பவானி நகர் என்.எஸ்.சி போஸ் தெருவை சேர்ந்த மாரியப்பன் சென்ற 32 வருடங்களாக மின்சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார். இந்த கடையின் உரிமையாளர் சித்திக் என்பவர் கடையை இராயபுரம் மனோகர் என்பவருக்கு விற்பனை செய்து விட்டார். இந்த நிலையில் மாரியப்பன் தனக்கு சேர வேண்டிய அட்வான்ஸ் தொகை 82 லட்சத்தை பெறுவதற்காக வக்கீல் நந்தகோபால் என்பவர் உடன் அட்வான்ஸ் பணம் கேட்டிருக்கின்றார். இறுதியில் அவர் 82 லட்சத்திற்கு 54 லட்சத்தை தருவதாக ஒப்புக்கொண்டார்.

அதன்படி தன்னுடைய மனைவி சாந்தி குமாரி என்பவரது வங்கி கணக்கில் பணத்தை போடும் மாறும் மாரியப்பனிடம் கொடுத்து விடுவதாகவும் வக்கீல் நந்த கோபால் மனோகரனிடம் கூறியிருக்கின்றார். இதை தொடர்ந்து சென்ற சில நாட்களுக்கு முன்பு அட்வான்ஸ் தொகை 54 லட்சத்தை சாந்தி குமாரி வங்கி கணக்குக்கு மாற்றம் செய்யப்பட்டது.

இந்த நிலையில்  நந்த கோபால் 10 லட்சத்தை மட்டும் மாரியப்பனுக்கு கொடுத்துவிட்டு மீதி 44 லட்சத்தை தராமல் மோசடி செய்து ஏமாற்றியதாக சொல்லப்படுகின்றது. பணத்தை தருமாறு மாரியப்பன் கேட்டபோது வக்கீல் தகராறு செய்ததும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து மாரியப்பன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து 44 லட்சம் மோசடி செய்த வழக்கில் நந்த கோபால் மற்றும் அவரின் மனைவி சாந்திக்குமாரி உள்ளிட்டோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Categories

Tech |