Categories
மாநில செய்திகள்

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி…. நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை பணிகள்…. அமைச்சர் ஆய்வு….!!!

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பிக் போட்டி ஜூலை 28-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதற்காக நெடுஞ்சாலை துறை மற்றும் பொதுப்பணி துறை சார்பில் நடைபெற்று வரும் பணிகளை அமைச்சர் எ.வ வேலு நேற்று ஆய்வு செய்தார். இதனையடுத்து நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் நடைபெற்று வரும் பணிகள் குறித்த விவரங்களை பார்க்கலாம். அதன்படி பெரிய தெற்கத்திய சாலை விமான நிலையம் முதல் சின்னமலை வரை ரூ. 10.70 கோடி மதிப்பில் 10.10 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து விமான நிலையத்தின் அருகே பசுமை பூங்கா அமைக்கும் பணி ரூ. 96 லட்சம் மதிப்பீட்டில் செய்யப்பட்டு வருகிறது. அதன் பிறகு நெடுஞ்சாலை பூங்காவில் செயற்கை நீரூற்று மற்றும் வணக்கம் சென்னை பாதகை வைக்கும் பணி ரூ. 47 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.

இதைத்தொடர்ந்து சாலை பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் சாலை வரையக் கோடு அமைக்கும் பணி ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டிலும், மத்திய கைலாஷ் மற்றும் சிறுசேரி வரை சாலை பாதை வரையரைக்கோடு அமைக்கும் பணி ரூ. 160 லட்சம் மதிப்பீட்டிலும், மைய தடுப்பானில் வண்ணம் பூசும் பணி ரூபாய் 85 லட்சம் மதிப்பீட்டிலும், சாலையில் உள்ள பாதசாரிகள் நடைபாதைக்கு வண்ணம் பூசும் பணி ரூபாய் 58 லட்சம் மதிப்பீட்டிலும், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சில பாதைகளை புதுப்பிக்கும் பணி ரூபாய் 120 லட்சம் மதிப்பீட்டிலும் நடைபெறுகிறது. இதேபோன்று ராஜீவ் காந்தி சாலை, பல்லாவரம் முதல் துரைப்பாக்கம் சாலை, சிறுசேரி சாலை முதல் பூஞ்சேரி வரை போன்ற பகுதிகளிலும் சாலை பணிகள் நடைபெற்று வருவதோடு, மாமல்லபுரத்தில் திட்டம் சாரா பணிகளும் நடைபெற்று வருகிறது.

Categories

Tech |