Categories
அரசியல்

44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி: டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி….? விலை எவ்வளவு…. இதோ முழு விவரம்….!!!!

உலகிலேயே முதன்முறையாக மிகப்பெரிய செஸ் போட்டியை தமிழகத்தில் நடத்துவதற்கான உரிமையை மத்திய அரசு வழங்கியுள்ளது. அதன்படி தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இந்த நிகழ்ச்சிக்கு 92 கோடி ஒதுக்குவதாக தெரிவித்தார். கடந்த ஜூன் 19ஆம் தேதி அன்று ஒலிம்பிக் போட்டிக்கான முதல் ஜோதி ஓட்டத்தை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த விழாவை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சில வாரங்களுக்கு முன்பாக கூட்டம் நடத்தப்பட்டது. அனைத்து மாவட்டங்களிலும் இந்த நிகழ்ச்சி குறித்து பரவலாக விளம்பரப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பாரம்பரிய வேஷ்டி சட்டை அணிந்த குதிரையின் அதிகாரப்பூர்வ சின்னமான தம்பி மற்றும் அதனுடைய சின்னமும் வெளியிடப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் “நம்ம சதுரங்கம் நம் பெருமை” என்ற விளம்பர வாசகங்கள் அடங்கிய பேருந்துகளை நகரம் முழுவதும் பயணிக்க கொடியசைத்து வைத்தார். வரும் 28-ம் தேதி மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இதில் 180 நாடுகளில் இருந்து சுமார் 2000க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொள்கிறார்கள்.

https://tickets.aicf.in./ என்கிற இணையதளத்தில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். இதில் 2 விளையாட்டு அரங்குகள் உள்ளன. அரங்கு 2 இல் போட்டியை காண ஒருவருக்கு டிக்கெட்டின் விலை ரூ.2000. வெளிநாட்டவருக்கு ரூ.6,000 இம், 19 வயதுக்குட்பட்ட மாணவர்கள், பெண்கள் மற்றும் தமிழக அரசு ஊழியர்களுக்கு ரூ.200 சலுகையில் டிக்கெட் பெறலாம். முதல் தரவரசையிள் இடம்பெறும் அரங்கு 1 டிக்கெட்டின் விலை 3000. அதே சமயம் வெளிநாட்டவர்கள் 8000 ரூபாய் செலுத்த வேண்டும். 19 வயதுக் உட்பட்ட மாணவர்கள் பெண்கள் மற்றும் தமிழக அரசு ஊழியர்களுக்கு தள்ளுபடி டிக்கெட் விலை 300.

Categories

Tech |