செஸ் ஒலிம்பியாட் போட்டியை விளம்பரப்படுத்துவதற்காக சுவர் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது.
சர்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வருகிற 28-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட வீரர்- வீராங்கனைகள் கலந்து கொள்ள இருக்கின்றனர். இந்த போட்டியை விளம்பரப் படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அரசு பேருந்துகளில் போட்டி குறித்த விளம்பர பாதகைகள் வைத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதன்பிறகு நேப்பியர் பாலத்தில் செஸ் போர்டு போன்று ஓவியம் வரையப்பட்டது.
இதனையடுத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள், அரசு மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் அரசு ஊழியர்கள், அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போன்றவர்களுக்கு செஸ் போட்டி நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து செஸ் ஒலிம்பிக் போட்டி தொடர்பான மஞ்சப்பை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டதோடு ,பல்வேறு விதமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் கரூர் மாவட்டத்தில் உள்ள கோட்டைமேடு பகுதியில் அரசு நடுநிலைப்பள்ளி பள்ளி ஒன்று அமைந்துள்ளது . இங்குள்ள சுவரில் செஸ் தொடர்பான ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது. இந்த ஓவியங்களை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியின் போது வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிட்ட சில அதிகாரிகள் உடன் இருந்தனர்.