சர்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெறும். இந்த போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த போட்டியின் தொடக்க விழா நேற்று சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியின் முதல் சுற்றில் நார்வே வீரரும் உலக சாம்பியனுமான மேக்னஸ் கார்ல்சன் வெற்றி பெற்றுள்ளார். அதன் பிறகு 2-வது சுற்றில் உருகுவே வீரர் மேயர் சார்ஜை மேக்னஸ் கார்ல்சன் தோற்கடித்தார். மேலும் இந்த தொடரில் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி ராண்டே சேடரும் வெற்றி பெற்றுள்ளார். இந்த சிறுமி செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொண்ட மிகவும் குறைந்த வயது வீராங்கணை ஆவார்.