Categories
தேசிய செய்திகள்

44 வது நாள் போராட்டம்… இன்று தொடங்குகிறது பேச்சுவார்த்தை… பெரும் எதிர்பார்ப்பு… !!!

டெல்லியில் விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று எட்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முடிவு செய்துள்ளதால் பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் 44 வது நாளாக டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் கோரிக்கையை முன் வைத்து விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் அனைவரும் தெரிவித்துள்ளனர். கடும் குளிரை தாங்க முடியாமல் தற்போது வரை 50 க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் நாடு முழுவதும் உள்ள பல்வேறு தரப்பினர் விவசாயிகளுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் இன்று எட்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு முன்னதாக நடந்த பேச்சுவார்த்தையில் எந்த ஒரு முடிவும் எட்டப்படாததால் இன்றைய பேச்சு வார்த்தை பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. வேளாண் சட்டங்களை ரத்து செய்ய விவசாயிகளும், போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது.

Categories

Tech |