Categories
உலக செய்திகள்

பதவியை ராஜினாமா செய்த 44 எம்.பி.க்கள்…. பதவி விலக மறுக்கும் போரிஸ் ஜான்சன்…!!!

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலக வேண்டும் என்று அமைச்சரவையே கொந்தளித்தும் அவர் ராஜினாமா செய்ய மாட்டேன் என்று உறுதியாக மறுத்திருக்கிறார்.

பிரிட்டன் நாட்டின் பிரதமரான போரிஸ் ஜான்சன் மீது ஊழல் புகார்கள் எழுந்தது. மேலும், நாட்டின் சுகாதார செயலர் மற்றும் நிதி அமைச்சர் இருவரும் போரிஸ் ஜான்சனின் ஆட்சியில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று கூறி, நேற்று முன்தினம் பதவி விலகினார்கள்.

அதன் பிறகு, நேற்று சுமார் 44 எம்பிக்கள் மொத்தமாக தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து விட்டனர். போரிஸ் ஜான்சனின் தலைமைக்கு ஆதரவு இல்லாத போதும், தனக்கு பதவி விலகும் எண்ணம் கிடையாது என்று தொடர்ந்து கூறிக்கொண்டிருக்கிறார். நேற்று மாலை, போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த 70% எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |