உக்ரைன் படையினர், ரஷ்ய நாட்டிலிருந்து தாங்கள் மீட்ட பகுதிகளில் புதைகுழிகளை தோண்டி 440 சடலங்களை கண்டெடுத்துள்ளனர்.
உக்ரைன் படையினர் தங்கள் நாட்டின் கிழக்கு பகுதியில், வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். ரஷ்யப்படையினர் எல்லையை விட்டு வெளியேறி பின் தள்ளப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் ஆக்கிரமித்த பகுதிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றன. ரஷ்ய தாக்குதல்களை முறியடித்து, உக்ரைன் படையினர் தங்கள் பகுதிகளை கைப்பற்றி முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள்.
அங்கு போரில் பலியான ராணுவத்தினர் மற்றும் மக்களின் சடலங்களை வயல்வெளிகளிலும் எரிந்து போன ராணுவ டேங்கர்களுக்கு உள்ளேயும் போட்டிருக்கிறார்கள். அந்த சடலங்கள், ட்ரோன்கள் மற்றும் ஆளில்லாத விமானத்தின் மூலமாக கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. ரஷ்ய படையினர் வெளியேறிய பகுதிகளில் சடலங்கள் புதைக்கப்பட்டிருக்கும் இடங்கள் கண்டறியப்பட்டன. அங்கு ஏறக்குறைய 440 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.