அமேசான் காட்டில் பரவி வரும் காட்டுத்தீயினை கட்டுப்படுத்த 44000 ராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
அரிய வகை மரங்கள், உயிரினங்கள், சிலந்திகள், அபூர்வ மூலிகைகள் அடங்கிய உலகின் மிகப்பெரிய மழைக் காடுகளில் ஒன்றான அமேசானில் கடந்த சில வாரங்களாக கட்டுக்கடங்காத காட்டுத் தீ பரவி வருகிறது. பல உயிரினங்கள், தாவரங்கள் அழியும் நிலை ஏற்பட்டதால் தீயை அணைக்க சுற்றுச் சூழல் அமைப்புகளும், உலக நாடுகளும் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் பிரேசில் அரசு தீவிரமாக ஈடுபட்டுவருகிறது.
தீயை அணைக்கும் பணியில் 44000 இராணுவ வீரர்களை ஈடுபடுத்த உள்ளதாக பிரேசில் அரசு அறிவித்துள்ளது. வீரர்கள் தீயை முற்றிலும் அணைக்கும் பணியில் ஈடுபடுவார்கள் எனவும், முதல் கட்டமாக 700 வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் பிரேசில் இராணுவ அமைச்சர் பெர்னாண்டோ அசி வீடோ தெரிவித்துள்ளார்.