தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் காவல் உதவி ஆய்வாளர் காலிப் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்புக்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் 444 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் ஆகும். இந்நிலையில் இதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்து வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் காவல் உதவி ஆய்வாளர் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
இதற்கு தகுதியுடைய காவலர்கள் 20% பேர் ஏற்கனவே விண்ணப்பித்துள்ளனர். இந்தத் தேர்வுக்கு காவலர்கள் விண்ணப்பிக்கும் பட்சத்தில் அவர்கள் தங்களுடைய உயர் அதிகாரிகளிடம் இருந்து தடையில்லா சான்றிதழை பெற வேண்டும். இந்த சான்றிதழை உடனடியாக பெற முடியாத காரணத்தினால் சில காவலர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் அவதியுற்று வருகின்றனர். எனவே இந்த சான்றிதழை பெற்று விண்ணப்பிக்க அவர்களுக்கு கால அவகாசத்தை ஏழு நாட்கள் நீட்டித்து உத்தரவிட வேண்டும். அதோடு இந்த சான்றிதழை பெற இயலாதவர்கள் நேர்காணலின்போது சான்றிதழை சமர்ப்பிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என கூறியுள்ளார்.