வீர ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள தேவதானம்பேட்டையில் 45 அடி உயரமுடைய வீர ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு நேற்று கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று காலை 7 மணிக்கு 4-வது கால யாக பூஜை நடைபெற்றுள்ளது. 9 மணிக்கு மேல தாளம் இசைக்க யாகசாலையில் இருந்து புனிதநீர் அடங்கிய கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது. பின்னர் 45 அடி உயரமுள்ள வீரஆஞ்சநேயர் சிலைக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.