மீனவர்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். அதில் ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் ஜூன் 14-ஆம் தேதி வரை 60 நாட்களுக்கு மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்றின் காரணமாக எங்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது.
இதனையடுத்து மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை பத்திரமாக மல்லிப்பட்டினம் துறைமுகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். மேலும் இந்த மீன்பிடி தடையால் மீனவர்கள், மீன் வியாபாரிகள், துறைமுகங்களில் கடை வைத்து நடத்துபவர்கள், ஐஸ் வியாபாரிகள் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர். எனவே உடனடியாக இந்த மீன்பிடி தடை காலத்தை 45 நாட்களாக மாற்றியமைக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.