Categories
தேசிய செய்திகள்

45 நாட்களுக்குள் நிலுவை தொகை…. நிதியமைச்சர் வெளியிட்ட தகவல்….!!!!

சிறு குறு நிறுவனங்களுக்கான நிலுவை தொகை 45 நாட்களுக்குள் தனியார் பெரு நிறுவனங்கள் வழங்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார் பெரு நிறுவன நிர்வாகிகளுடன் நடத்திய கூட்டத்தில் பேசிய அவர், தனியார் நிறுவனங்கள் தாங்கள் பெறும் சரக்குகள் மற்றும் சேவைகளுக்காக குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு பணம் செலுத்த வேண்டியுள்ளது. சிறு தொழில்கள்தான், நமது நாட்டு பொருளாதாரத்தின் முது கெலும்பு. அவர்களுக்கு செல்ல வேண்டிய பணம் உரிய நேரத்தில் செல்ல வேண்டும்.

நிறுவன பதிவாளரிடம் தாக்கல் செய்யப்படும் நிலுவை தொகை விபரங்கள் இடம் பெற்றிருக்கும் வரவு செலவு கணக்கு புத்தகங்களையும் வழங்க வேண்டும் மத்திய அரசும் 90 நாட்களுக்குள் நிலுவை தொகை செலுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது என்று தெரிவித்தார்.

Categories

Tech |