Categories
மதுரை மாவட்ட செய்திகள்

45 நாட்களுக்கு பிறகு குறையும் தொற்று…. மீண்டு வரும் மதுரை….!!

கடந்த 45 நாட்களாக கொரோனா தொற்றிலிருந்து மதுரை மீண்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த சில தினங்களாக மதுரையில் கொரோனா வைரஸ் தொற்று அதிகம் உள்ள நிலையில் தற்போது மதுரை  கொரோனாவில் இருந்து மீண்டு வந்துகொண்டு இருக்கிறது. ஜூன் 20ம் தேதிக்கு பின் மதுரையில் மிகத் தீவிரமான கொரோனா பாதிப்பு இருந்து வந்தது. தினம்தோறும் 400க்கும் மேல்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்காப்பட்ட நிலையில் அங்கு பரிசோதனைகள் அதிகப்படுத்தப்பட்டது.

தினமும் 5000 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு கொரோனா நோயாளிகளை கண்டறிந்து  தனிமைப்படுத்தப்பட்டதால், கொரோனா தொற்று தற்போது குறைந்து வருகிறது. மேலும் கடந்த 45 நாட்களில் முதல் முறையாக பாதிப்பு 100க்கும் கீழ்  பாதிப்பு எண்ணிக்கை வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே கொரோனா தொற்றில் இருந்து மதுரை கிட்டத்தட்ட மீண்டும் வந்து கொண்டிருக்கிறது எனவும், விரைவில் முழு அளவில் மீண்டு வரும் எனவும் மதுரை சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |