Categories
தஞ்சாவூர் மாநில செய்திகள்

45 நாட்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம்…. விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு அறிவிப்பு…!!!!

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி திருச்சியில் 45 நாட்கள் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க புதிய அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. அந்த விழாவில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு கலந்துகொண்டு புதிய அலுவலகத்தை திறந்து வைத்துள்ளார்.

அதன் பின்னர் ஒரத்தநாடு புதூரில், இயங்கி வரும் அரசு நேரடி கொள்முதல் நிலையத்திற்கு சென்று நெல்லை விற்பனை செய்ய காத்திருந்த விவசாயிகளை சந்தித்துப் பேசியுள்ளார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர் கூறியதாவது, தஞ்சை மாவட்டத்தில் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை விரைவாக கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதையடுத்து 17% கூடுதலான ஈரப்பதம் உள்ள நிலையில் கொள்முதல் செய்ய வேண்டும்.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வேலைபார்க்கும் தொழிலாளர்களுக்கு 1 மூட்டைக்கு 20 ரூபாய் கூலியாக அரசு அவர்களுக்கு வழங்க வேண்டும். விவசாயிகள் பெற்றுள்ள கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், விவசாயிகள் விளைவிக்கும் உற்பத்திப் பொருள்களின் விலையை உயர்த்தி லாபகரமாக வழங்க வேண்டும் என்றும், புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி விரைவில் திருச்சியில் 45 நாட்கள் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக இருக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |