Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

45 பவுன் நகை, கார் போதாது… இன்னும் வரதட்சணை வாங்கிட்டு வா…. கொடுமை தாங்காமல் இளம்பெண் தற்கொலை….!!

 கடலூரில் வரதட்சனை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டதற்கு  மாமியாரையும் கணவரையும் போலீசார் கைது செய்துள்ளனர் . 

 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகேயுள்ள சின்னதானங்குப்பத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகள் சுசிதா கிருபாலினி (25) . இவர் கடலூர் மஞ்சக்குப்பம் கூட்டுறவு வீட்டு வசதி சங்க துணை பதிவாளர் அலுவலகத்தில் முதுநிலை ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கும் எம். புதூரைச் சேர்ந்த சந்தோஷ் குமார்(28) என்பவருக்கும் கடந்த 30.8.2020 அன்று திருமணம் நடைபெற்றது. திருமண சீர் வரிசையாக சுசிதாவின் பெற்றோர் 45 ½ பவுன் நகைகள் , ஒரு கார் மற்றும் சீர்வரிசை பொருட்களை சந்தோஷ்குமாருக்கு கொடுத்துள்ளனர். திருமணமான சில நாட்களில் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் சந்தோஷ்குமார், அவரது தாய் இந்திரா (50) மற்றும் குடும்பத்தினர் சுசிதாவிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

 

இதனால் மனமுடைந்த சுசிதா கிருபாலினி நேற்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவலை சந்தோஷ்குமாரின் குடும்பத்தினர் சுசிதாவின் பெற்றோருக்கு தெரிவித்தனர். இதை கேட்டு பதறிப்போன சுசிதாவின் பெற்றோர் சந்தோஷ்குமாரின் வீட்டிற்கு வந்து அங்கு இறந்து கிடந்த சுசிதாவின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் சுசிதா கிருபாலினியின் தற்கொலைக்கு காரணமான சந்தோஷ் குமார் , இந்திரா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Categories

Tech |