Categories
உலக செய்திகள்

45 பிரபலங்களின் ட்விட்டர் ஹேக் செய்யப்பட்ட விவகாரம்… மூளையாக செயல்பட்ட சிறுவன்..!!

உலகின் மிக பிரபலமான 45 பேரின் டிவிட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்ட வழக்கில் இருவர் கண்டறியப்பட்ட நிலையில் இதற்கு மூளையாக செயல்பட்ட 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். 

சென்ற மாதம் 15 ஆம் தேதி முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா, உலக பெரும் பணக்காரர் பில்கேட்ஸ், டெஸ்லா நிறுவன தலைவர் எலன் மாஸ்க், அமேசான் நிறுவன தலைவர் ஜேப் போனர்ஸ், அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் உட்பட்ட பல உலகின் முக்கிய பிரபலங்கள் 45 பேரின் ட்விட்டர் கணக்குகள் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டன. ஹேக் செய்யப்பட்ட டுவிட்டர் பக்கத்தில் இருந்து, “கொரோனா காரணமாக நான் என் சமூகத்திற்கு திருப்பிக் கொடுக்கிறேன். எனக்கு நீங்கள் அனுப்பும் அனைத்து பிட்காயின் கிரிப்போடோ கரன்சியிலும் இரண்டு மடங்காக உங்களுக்கு அனுப்பப்படும். நீங்கள் ஆயிரம் டாலர்களை எனக்கு அனுப்பினால் அது உங்களுக்கு 2000 டாலர்களாக திருப்பி கொடுக்கப்படும்” என பதிவிட்டு இருந்தனர்.

பிரபலங்களின் அதிகாரபூர்வ கணக்குகளின் மூலமாக தடை செய்யப்பட்ட பிட்காயின் தொடர்பான செய்திகளை உலகம் முழுவதும் பரப்பியதால் அந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு தான் பிரபலங்களின் ட்விட்டர் பக்கங்கள் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. நீண்ட நேரமாக போராடி பிரபலங்களின் ட்விட்டர் பக்கங்களை இயல்பு நிலைக்கு கொண்டுவந்தனர். இத்தகைய ஹேக்கிங் செயல்பாடு அல்லது சீனாவில் நடந்திருக்கலாம் என அமெரிக்கா சந்தேகத்தை எழுப்பி இருந்தது. இதனைத்தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில், பிரபலங்களின் ட்விட்டர் கணக்கை ஹேக் செய்து அதில் பிட்காயின் தொடர்பான தகவல்களை வெளியிட்ட மூன்று நபர்கள் கொண்ட இளைஞர் குழுவை கண்டறிந்தனர்.

இதில் புளோரிடாவை சேர்ந்த நிமா பாசீல் (22), இங்கிலாந்தை சேர்ந்த ஷேப்பர்டு (19) ஆகிய இரு நபர்களும் டுவிட்டர் ஹேக்கிங்கில் ஈடுபட்டுள்ளனர். மூன்றாவது நபரான 17 வயது சிறுவன் தான் இந்த ஹேக்கிங்கில் மூளையாக செயல்பட்டிருக்கிறான் என அதிகாரிகள் கூறியுள்ளனர். கிராகாம் கிளார் என்ற பெயருடைய 17 வயது சிறுவன்  இந்த மிகப்பெரிய ஹேக்கிங்கின் முக்கிய காரணம் என தெரியவந்ததை தொடர்ந்து  அவர்கள் அனைவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த டுவிட்டர் ஹேக்கிங்கில் கிளார்  1 லட்சம் டாலர்கள் அளவில் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக  அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Categories

Tech |