நாடு முழுவதும் 45 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் நாளை முதல் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், உலக நாடுகளில் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் குறிப்பிட்ட வயதினருக்கும் மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 45 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் நாளை முதல் புதிய தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. தடுப்பூசி போட விரும்புபவர்கள் www.cowon.gov.in என்ற இணையதளத்தில் அதற்கான முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவு செய்ய விருப்பமில்லை என்றால் அருகிலுள்ள தடுப்புசி மையத்திற்கு மாலை 3 மணிக்கு மேல் சென்று உடனடி பதிவை நடத்திக்கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது