Categories
மாநில செய்திகள்

45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு…. சென்னை மாநகராட்சி அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நோய்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் ஒரு சிலருக்கு மூச்சுத்திணறல் போன்ற தீவிர அறிகுறிகள் இருப்பதன் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிற்கு வந்த பிறகும் அடிக்கடி ஆக்சிஜன் அளவை பரிசோதிக்க வேண்டும்.

எனவே அவர்களுக்கு பல்ஸ் ஆக்சிமீட்டர் கருவிகள் தேவைப்படுகிறது. இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 45 வயதிற்கு மேற்பட்ட இணை நோயுடைய நபர்கள் மற்றும் வசதியில்லாத ஏழை, எளிய நபர்களுக்கு பல்ஸ் ஆக்சிமீட்டர் கருவிகள், அவர்கள் குணமடைந்தவுடன் திரும்ப ஒப்படைக்கும் வகையில் மாநகரட்சியின் சார்பில் வழங்கப்படவுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Categories

Tech |