Categories
தேசிய செய்திகள்

கொரானாவை கட்டுப்படுத்தாவிட்டால் 45 மில்லியன் மக்கள் பலியாக நேரிடும்… எச்சரிக்கும் மருத்துவர் ..!

கொரானா வைரஸை கட்டுப்படுத்த முடியாவிட்டால் உலக மக்கள் தொகையில் 60 சதவீதம் பேர் பாதிப்படைவார்கள் என ஹாங்காங்கின் உயர் மருத்துவ அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

கொரானா வைரஸ் தொற்று நோயால் உலகம் முழுவதும் 43000-திற்கு  அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும்  ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.  இந்நிலையில் இந்த வைரஸ் நோயை கட்டுப் படுத்துவதற்கான முயற்சியில் பல ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

சீனா நகரம் முழுவதும் போக்குவரத்து சேவைகள் தடைசெய்யப்பட்டுள்ளது சீனா மற்றும் அதன் பகுதியில் இருந்து திரும்பிய கப்பல் தனிமைப்படுத்தப்பட்டு  சோதனை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்  பொது சுகாதார மருத்துவத்தின் தலைவரான பேராசிரியர் கேப்ரியல்லியல் இறப்பு விகிதம்  ஒரு சதவீதத்தை பெற்றிருந்தாலும் கூட பரவக்கூடிய இந்த நோயால் பல ஆயிரக்கணக்கான மக்கள்  கொள்ளப்படுவார்கள்  என்று எச்சரித்துள்ளார்.

மேலும் இதனை கட்டுப்படுத்தாவிட்டால் உலக மக்கள் தொகையில் 60 முதல் 80 சதவீதம் பேர் இந்த நோய் தொற்றுக்கு ஆளாக கூடும். 45 மில்லியன் மக்கள் பலியாக ஆவார்கள்  என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |