செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பேரறிஞர் அண்ணா காலத்திலும் சரி, புரட்சித் தலைவர் எம்ஜிஆர் காலத்திலும் சரி, புரட்சித்தலைவி அம்மாவுடைய காலத்திலும் சரி, அம்மாவுடைய அரசு இருந்த காலத்திலும் சரி, ஒரு தனிமனித பாதுகாப்பு, அதேபோல ஒரு தனிமனித உரிமை, அதேபோன்று சட்ட ஒழுங்கை யார் கையில் எடுத்தாலும், அவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்கி ஒடுக்கி ஒரு சட்டத்தின் உடைய ஆட்சியை நம்முடைய அம்மாவுடைய அரசு செய்திருக்கின்றது.
ஆனால் இன்றைக்கு அது போன்ற நிலை இருக்கின்றதா என்றால், இல்லை பத்திரிக்கை எடுத்தாலும் சரி, ஊடகங்கள் பார்த்தாலும் சரி, ஒரே நாளில் 3 கொலை 4 கொலை, 5 கொலை இப்படி கொலைகளின் உடைய கூடாரமாகவும், கொள்ளைகளின் கூடாரமாகவும் தான் இன்றைக்கு தமிழ்நாடு இருக்கின்றது என்பதை நான் இந்த நேரத்தில் பதிவு செய்கிறேன்.
அடிப்படை கட்டமைப்பு வசதி, அதிலே இந்த விடியாத அரசு கவனம் செலுத்துகிறதா? என்று சொன்னால், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் முற்றிலும் தோல்வி. பொதுவாகவே மழை நீரை வந்து நாம் சேமிக்கின்ற பழக்கம் வந்து புரட்சித்தலைவர் அம்மா காலத்தில் இருந்து ஒரு பெரிய அளவிற்கு மக்கள் இயக்கமாகவே அம்மா அவர்கள் கொண்டு வந்தார்கள்.
ஆனால் இந்த விடியாத திமுக அரசு, அதையெல்லாம் தூக்கி போட்டுவிட்டு மழை நீரை கூட சேமிக்க முடியவில்லை, மழை பெய்யாத இடத்தில் இன்றைக்கு கடலூர், சிதம்பரம் மாவட்டத்தில் வெள்ளம் வருகிறது. அப்படி என்று சொன்னால் ஒரு காவிரி நீர் பெருக்கெடுத்து வரும்போது, அதனுடைய கிளை ஆறுகள், கிளை நதிகள், வாய்க்கால்கள் இதையெல்லாம் முறையாக தூர்வாரப்பட்டு, எங்களுடைய அம்மாவுடைய காலத்திலும், மாண்புமிகு எடப்பாடியார் காலத்தில் முறையாக தூர்வாரப்பட்டது.
எனவே அதை பராமரித்து தூர்வாரி இருந்தால் நிச்சயமாக ஏறக்குறைய பல டிஎம்சி தண்ணீர் கடலில் சென்று வீணாவதை நாம் தடுத்திருக்க முடியும். ஆனால் அவ்வாறு அதை கடலில் சென்று வீணாவதை தடுக்க முடியாத இந்த அரசு வீணான மழை நீரை சேமிக்க முடியாமல் கடலுக்கு அனுப்பி விட்டது. அதேபோன்று பருவமழை எதிர்நோக்குகின்ற ஒரு சூழ்நிலையில் சென்னையில் ஒரு வேலை நடந்த மாதிரி தெரியவில்லை, வாய்க்கால்கள் தூர்வாரப்படவில்லை, அதேபோல மழை, வெள்ளம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவுமே இந்த விடியாத அரசு எடுக்கவில்லை என்பதுதான் நான் இந்த நேரத்தில் சொல்லிக் கொள்வதற்கு கடமைப்பட்டிருக்கிறேன் என தெரிவித்தார்.