Categories
உலக செய்திகள்

450 கிலோ எடை கொண்ட சிற்பத்தின் நகல்…. எக்ஸ்போ 2020 கண்காட்சி…. பார்வையாளர்கள் ஆர்வம்….!!!

துபாயில் நடைபெறயிருக்கும் எக்ஸ்போ 2020 கண்காட்சிக்கு மைக்கேலேஞ்சலோ சிற்பத்தின் நகல் கொண்டு வரப்பட்டுள்ளது.

உலக புகழ்பெற்ற சிற்ப கலைஞரின் ஒருவரான மைக்கேலேஞ்சலோவிற்கு  பெரும் புகழை சேர்க்கும் வகையில் தற்போது உருவாக்கப்பட்ட டேவிட் சிலை அமைந்துள்ளது. இந்த சிலை உருக்குலைந்த பளிங்கு கற்களில் இருந்து வார்த்தெடுத்த சிலை டேவிட் சிலையாகும். இச்சிலையை உருவாக்க சுமார் 18 மாதங்கள் ஆகியுள்ளது. மேலும் இந்த சிற்பம் இத்தாலி நாட்டில் அரிய பொக்கிஷங்களில் ஒன்றாக இடம் பிடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இச்சிலை முற்றிலும் அச்சு அசலான உருவத்துடன் முப்பரிமாண பிரதிபலிப்புடன் காணப் ப்படுகிறது. அங்கிருக்கும் உண்மையான டேவிட் சிலையை 40 மணி நேரம் ஸ்கேன் செய்யது தற்போது 450 கிலோ எடை கொண்ட அந்த சிற்பத்தின் நகல் அச்சு அசலாக ‘அக்ரெலிக் ரெசின்’ என்ற பொருளால் உருவாக்கப்பட்டிருக்கிறது .இதில் உண்மையான சிலையில் காணப்படும் விரிசல் கூட தத்ரூபமாக அமைந்துள்ளது.

இத்தாலியில் உருவாக்கப்பட்ட இந்த சிலையை நகரில் இருந்து வெற்றிகரமாக துபாய்க்கு விமானம் மூலம் 6 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவு கடந்துகொண்டு வந்துள்ளனர். துபாயில் நடக்கவிருக்கும் எக்ஸ்போ 2020 கண்காட்சி வளாகத்தில் இந்த சிலையை பொருத்திருப்பதாக தகவல் கூறியுள்ளனர். இந்த சிலையின் அடிப்பகுதி மட்டும் 150 கிலோ எடை உடையது என்று கூறியுள்ளனர்.

இந்த சிலை 14 பாகங்களைக் கொண்டுள்ளதாகவும் இதனை ஃப்ளோரன்ஸ் நகரிலிருந்து இதனை வடிவமைத்த குழுவினர் மிகுந்த பாதுகாப்புடன் அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். சிலையை பொருத்தும் பணி மிக விரைவாக நடந்து வருவதால் கண்காட்சியில் மிக விரைவில் பார்வையாளர்களுக்கு இந்த நகல் பளிங்கு சிற்பம் காட்சியளிக்க இருப்பதாக இத்தாலி நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Categories

Tech |