Categories
உலக செய்திகள்

4500 கோடி ரூபாய் உதவி தொகை…. உக்ரைனுக்கு அளித்த அமெரிக்க அதிபர்….!!

அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் உக்ரைனுக்கு உதவி தொகையாக 4500 கோடி ரூபாய் கொடுப்பதாக ஒப்புதல் அளித்துள்ளார்.

ரஷ்யா உக்ரேன் மீது நேற்று முன்தினம் போர் தொடுத்தது. உக்ரேன் எல்லைக்குள் ஒரு பக்கம் ஏவுகணை வீச்சும், மற்றொரு பக்கம் குண்டு மழை பொழிந்து ரஷ்யா வேகமாக முன்னேறிச் சென்றது. இதனால் முதல் நாளிலே உக்ரைனின் பல நகரங்கள் உறைந்து போயின. இதனைத் தொடர்ந்து மூன்றாவது நாளாக ரஷ்யா முழுவீச்சில் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில் அதிபர் ஜோ பைடன் உக்ரைனுக்கு உதவி வழங்குவதாக ஒப்புதல் அளித்துள்ளார். அதில் ராணுவ பயிற்சிக்கும், கல்விக்கும் மேலும் போர்க் கருவிகள் வாங்கவும் உக்ரைனுக்கு 2627 கோடி ரூபாய் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வெளியூர் அமைச்சகத்துக்கும் உக்ரைனுக்கும் 1873 கோடி ரூபாய் நிதி உதவி அளிக்கவும் ஜோ பைடன்  ஒப்புதல் அளித்துள்ளார்.

Categories

Tech |