தமிழகத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் 9 ஆம் தேதி உலக அஞ்சல் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் அஞ்சல் துறையின் பெருமைகள் மற்றும் அதன் சிறப்புகளை அறிந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படையிலும். கடிதம் போக்குவரத்தை பொதுமக்கள் மற்றும் இன்றைய தலைமுறை இடையே கொண்டு சேர்க்கக் கூடிய வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி சேலம் மாநகராட்சி 34 வது கோட்ட திமுக மாவட்ட உறுப்பினர் ஈசன் இளங்கோ செய்த புதிய முயற்சி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. அதாவது ‘எனது குப்பை எனது பொறுப்பு’ என்ற தமிழக அரசின் திட்டத்தின் கீழ் குப்பைகளை தரம் பிரிப்பது சேலம் மாநகரை தூய்மையாக வைப்பது, குப்பைகள் இல்லாத நகரை உருவாக்க அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தி தன் 34 ஆவது கூட்டத்திற்கு உள்ளிட்ட 4500 குடும்பங்களுக்கு தனித்தனியே கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் அந்த கடிதங்களை அனுப்பும் நிகழ்ச்சி சேலம் அம்மாபேட்டையில் நேற்று சிறப்பான முறையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு மாமன்ற உறுப்பினர் ஈசன் இளங்கோ மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடங்கி வைத்தனர்.
அதன் பிறகு இந்நிகழ்ச்சியில் பேசிய ஈசன் இளங்கோ, தொழில்நுட்ப வளர்ந்து விட்ட இன்றைய காலகட்டத்தில் கடிதம் போக்குவரத்து என்பது முற்றிலும் மறைந்து போய்விட்டது. கடிதங்கள் மூலம் ஏற்பட்டுள்ள நன்மைகள், உருவான நட்பு பாலங்கள் குறித்து இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும். எனவே தான் கடிதம் எழுதுவது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்தேன். அது நமது மாநகரக்கை பயனளிக்கும் வகையில் இருக்க வேண்டும். அதன் அடிப்படையில் ‘எனது குப்பை எனது பொறுப்பு’ என்ற திட்டம் குறித்து நான்காயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன். இந்த கடிதத்தின் மூலம் பொதுமக்களிடம் குப்பைகள் இல்லாத மாநகரை உருவாக்குவது, தங்கள் வசிக்கும் பகுதியை தூய்மையாக வைத்துக் கொள்வது, மக்கு மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரிப்பது உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய கடிதங்கள் ஒவ்வொரு வீடுகளுக்கும் அனுப்பப்படுகிறது. இந்த விஷயத்தில் மக்கள் மத்தியில் புதிய விழிப்புணர்வு ஏற்படுத்த உதவிகரமாக இருக்கும் என்று 34 அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இவரது செயல் பலரின் பாராட்டுகளை பெற்றுள்ளது.